Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிலிருந்தே ஓட்டு போடலாம்… நீங்க எங்கேயும் அலைய வேண்டாம்… நாங்களே உங்களை தேடி வாரோம்..!!

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களிடம் தபால் ஓட்டு பெறும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போட்டு கொள்ளலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பெரம்பலூர் ஆகிய சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 11 ஆயிரத்து 699 முதியோர் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 64 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். இதில் குன்னம் தொகுதியில் 294 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 538 முதியோர் வாக்காளர்களும் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க உள்ளனர். மேலும் பெரம்பலூர் தொகுதியில் 380 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 615 முதியோர் வாக்காளர்களும் என மொத்தம் 1,827 பேர் சட்டமன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க உள்ளனர். இந்த வாக்காளர்கள் மார்ச் 27-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை அவர்கள் வீட்டிலிருந்தே தபால் ஓட்டு போடலாம்.

அந்தவகையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களிடம் நேற்று முதல் தபால் ஓட்டு பெறும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து தபால் ஓட்டு பெறும் பணி நாளை குன்னம் தொகுதியில் தொடங்க உள்ளது. இதில் 15 மண்டல அலுவலர்கள் அடங்கிய அலுவலர்கள் குழுவினர் இந்த பணியில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் ஈடுபட்டுள்ளனர். ஜி.பி.எஸ். பொருத்தப்பட்ட வாகனத்துடன் ஒவ்வொரு மண்டல அலுவலரும் தலா ஒரு வாக்குப்பதிவு அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர், ஒளிப்பதிவாளர், நுண் பார்வையாளர், போலீஸ்காரர் ஆகியோருடன் மாற்று திறனாளிகள் மற்றும் முதியோர்கள் உள்ள வீடுகளுக்கு சென்று தபால் ஓட்டு பெரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மாற்று திறனாளிகள் மற்றும் முதியவர்கள் தபால் ஓட்டை தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குச் சீட்டில் ஓட்டை பதிவு செய்து போட்டனர்.

Categories

Tech |