வாத்தி கம்மிங் பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் நடனமாடிய வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர் . பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூலை வாரி குவித்தது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் உலக அளவில் பிரபலமடைந்துள்ளது .
https://twitter.com/Muthuvirat4/status/1375438118543745036
இந்த பாடலுக்கு பலரும் நடனமாடிய வீடியோக்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இந்நிலையில் இந்த பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் மேடையில் நடனமாடி அசத்திய வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையான கீர்த்தி அவருடன் இணைந்து பைரவா, சர்க்கார் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .