பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூரில் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பசும்பலூர் பால் குளிரூட்டும் நிலையம் எதிரில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு வயலுக்கு சென்றுள்ளார். அதன்பின் வயலுக்குச் சென்ற முத்துசாமி வீட்டிற்கு மதியம் 3 மணி அளவில் திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் வீட்டின் உள்ளே சென்று பீரோவை சோதித்து பார்த்தார்.
அப்போது அங்கு இரும்பு பெட்டி உடைக்கப்பட்டிருந்தது மேலும் அதில் இருந்த ரூ.10,000 பணம் மற்றும் பீரோவில் இருந்த ரூ.12,000 ஆயிரம் என மொத்தம் ரூ. 22 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வி.களத்தூர் காவல் நிலையத்தில் முத்துசாமி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பசும்பலூரில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களுக்குள் மூன்று திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.