வங்காளதேசம் 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள பிரதமர் காளி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
பாகிஸ்தான் பல போராட்டங்களுக்கு பிறகு கடந்த 1971 ஆம் ஆண்டு வங்களாதேசம் பிரிந்து தனி நாடாக மாறியாது.அதில் இந்தியாவிற்க்கு மிகப் பெரிய பங்கு உள்ளது . அதன் காரணமாக அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா என்பவர் சுதந்திர பொன் விழாவில்(50-வது ஆண்டு) சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இந்திய நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். கடந்த ஒரு வருட காலமாக கொரோனா பாதிப்பு காரணமாக பிரதமர் மோடி வெளிநாடு சுற்றுப்பயணம் எதுவும் செல்லாமல் இருந்தார் .
இந்நிலையில் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் தனி விமானம் மூலமாக 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் வங்காளதேசம் சென்றார். அங்கு வங்காளதேச தலைநகர் டாக்கா விமான நிலையத்தில் பிரதமர் இறங்கியபோது அவருக்கு நேரில் பூங்கொத்து கொடுத்து அந்நாட்டின் பிரதமர் வரவேற்றார். அதன் பிறகு 1971 ஆம் ஆண்டு நடந்த வங்காளதேச சுதந்திரப் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள நினைவு சின்னத்திற்கு நேரில் சென்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு நேற்று முன்தினம் அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
இதனையடுத்து சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று அந்நாட்டின் ஹூல்னா மாகாணம் சட்ஹூரா மாவட்டம் ஈஸ்வரிப்பூர் பகுதியிலுள்ள ஜேஷாேரிஸ்வரி காளியம்மன் கோவிலுக்கு பிரதமர் சென்று சிறப்பு வழிபாடு செய்தார்.அங்கு பேசிய அவர், இந்த சக்தி பீடத்தில் உள்ள காளி அம்மனை வழிபட எனக்கு இன்று வாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனாவிலிருந்து மனிதகுலம் விடுபடவேண்டும் என்று காளியம்மனிடம் பிரார்த்தனை செய்துள்ளேன் என அவர் கூறியுள்ளார் .