மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி கமலஹாசனை விவாதத்திற்கு அழைத்து இருந்த நிலையில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசனை விவாதத்திற்கு அழைத்திருந்தார். இந்நிலையில் விவாதத்திற்கு தயாராக இருப்பதாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒருவரை ஒருவர் சாடி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமலஹாசனை விவாதத்திற்கு அழைத்திருந்தார். அதற்கு கமல்ஹாசன் விவாதத்துக்கு தயாராக இருப்பதாகவும், பிரதமர் மோடியுடன் நாங்கள் விவாதம் செய்ய தயாராக இருக்கிறோம் என்றும் கூறியிருந்தார். அதற்கு ஸ்மிருதிராணி ஏற்பாடு செய்யட்டும். பின் ஒவ்வொரு பாஜக தலைவர் உடனும் விவாதம் செய்வார் என அதில் தெரிவிக்கப்பட்டது.