ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு தடை விதிக்க கோரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கிற்கு எதிராக ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில், விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தடை விதிக்க கூறுவதில் உள்நோக்கம் இருப்பதாகவும், அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் எதையோ மறைக்க நினைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து விசாரணை தற்பொழுது தொய்வில்லாமல் சென்று கொண்டிருப்பதாகவும், அப்பல்லோ மருத்துவர்கள் விசாரணைக்கு ஆஜராக வில்லை என்றால் விசாரணையில் தொய்வு ஏற்படும் என்றும் ஆறுமுகசாமி ஆணையம் குறிப்பிட்டதையடுத்து, விசாரணைக்கு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்றும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணைக்கு விதித்துள்ள தடையை நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.