நடிகை நிரஞ்சனி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பதிவு செய்துள்ளார் .
தமிழ் திரையுலகில் நடிகை நிரஞ்சனி ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். சமீபத்தில் நடிகை நிரஞ்சனிக்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமியுடன் திருமணம் நடைபெற்றது . இந்நிலையில் இந்த தம்பதியை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் வந்து சந்தித்து வாழ்த்தியுள்ளார்.
Awww…How on earth can a person be so nice n humble !!!!! Thanks for the lovely long conversation and memories ❤️🤗🤗@Siva_Kartikeyan @desingh_dp @karthigathiru pic.twitter.com/tWM7PhvsH1
— NiranjaniAhathian (@Niranjani_Nini) March 28, 2021
அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை நிரஞ்சனி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ‘நீண்ட நேரம் சிவகார்த்திகேயனுடன் உரையாடினேன் . இந்த பூமியில் இப்படி ஒரு நல்லவர் எப்படி இருக்க முடியும் என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த நீண்ட உரையாடல் எனக்கு என்றும் நினைவில் நிற்கும்’ என பதிவிட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனுடன் நிரஞ்சனா, தேசிங்கு பெரியசாமி, கனி ஆகியோர் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.