Categories
தேசிய செய்திகள்

உன்னாவ் விவகாரம் …. திமுக, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆர்ப்பாட்டம் ….!!

உன்னாவ் விவகாரம் தொடர்பாக  திமுக காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் கைது செய்யப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதற்கிடையே சிறுமி சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் சிறுமியின் குடும்பத்தினர் 2 பேர் உயிரிழந்த நிலையில் சிறுமி படுகாயமடைந்து சிகிக்சை பெற்று வருகின்றார்.

Image result for திமுக, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆர்ப்பாட்டம்

இதுதொடர்பாக குல்தீப் சிங் உட்பட 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரப்பிரதேச அரசு பரிந்துரை செய்தது. இந்த வழக்கின் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில் உன்னாவ் சம்பவத்தில் சிறுமிக்கு நீதி வழங்கக்கோரி எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |