திருநெல்வேலியில் முன்னாள் மேயர் உட்பட 3 பேர் கொலை வழக்கில் தனது மகனுக்கு எந்த தொடர்பும் இல்லை என திமுக பிரமுகர் சீனியம்மாள் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி. அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் திமுக பிரமுகர் சீனியம்மாள் மகன் கார்த்தியை கைது செய்தனர். 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு அவர் நேற்று இரவு 7 மணிக்கு மணிக்கு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி 3 பேரின் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சீனியம்மாள் மகன் கார்த்திகேயனை நேற்று இரவு காவல்துறையினர் மீண்டும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கிற்கும் தன்னுடைய மகனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று திமுக பிரமுகர் சீனியம்மாள் தெரிவித்துள்ளார்.