மதுரையில் தந்தையை குளவிக் கல்லை போட்டு கொன்ற மகனுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
மதுரை மாவட்டம் கள்ளக்குடியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது தாயார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் செந்தில்குமார் தந்தையிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு தாயின் நகையிணையும் தனது கல்யாணத்திற்கு போட்ட மோதிரத்தையும் தருமாறு கேட்டுள்ளா. ஆனால் தந்தை அவருக்கு கொடுக்க மறுத்தினால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் அருகிலிருந்த குழவிக் கல்லை எடுத்து தந்தையின் மண்டையை உடைத்ததால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து கள்ளிக்குடி காவல்துறையினர் வழக்குப் பதிந்து செந்தில்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு தற்போது மதுரை கோர்ட்டில் விசாரணைக்கு வந்ததையடுத்து அவ்வழக்கிற்காக அரசு தரப்பில் எல்.செல்வம் என்ற வக்கீல் ஆஜராகி இருக்கிறார். அந்த விசாரணையின் இறுதியில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதிகள் செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டனர்.