Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எங்க கூட தான் வந்தான் ஆனா அவன காணும்…. பெற்றோர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சடலமாக மீட்கப்பட்ட வாலிபர்….!!

மதுரையில் கண்மாயில் வாலிபர் பிணமாகக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  அருண்குமார் என்ற மகன் உள்ளார். இவர் தனது இரு நண்பர்களுடன் அதேபகுதியிலிருக்கும் வடகரை கண்மாய்க்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது நண்பர்கள் அருண் குமாரின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினரிடம் அருண்குமாரை காணவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.

அதனால் அருண்குமார் குடும்பத்தார்கள் அவர்கள் அனைவரும் கடைசியாக சென்ற கண்மாய்க்கு சென்று பார்த்தபோது அவர் அதில் பிணமாக மிதந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்கள் சோழவந்தான் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அப்புகாரை ஏற்ற சப் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரின் இரு நண்பர்களை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |