பிக்பாஸ் பிரபலம் ஷிவானி கடற்கரையில் ஸ்டைலாக நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷிவானி நாராயணன் . இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார் . தற்போது ஷிவானி மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். மேலும் அவர் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
Beach Girl 🍹 @touronholidays pic.twitter.com/WNYtDla9y8
— Shivani Narayanan (@Shivani_offl) March 27, 2021
இந்நிலையில் இருமுகன் படத்தில் இடம்பெற்ற ‘ஹெலனா’ பாடலுக்கு கடற்கரையிலும் கடலிலும் செம ஸ்டைலாக நடனமாடிய வீடியோவை ஷிவானி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்குகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.