Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலை முடிஞ்சு வீட்டுக்கு தான் போயிருக்காரு…. தனியார் நிறுவன ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மதுரையில் வாலிபர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிச்சைமுத்து என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிச்சைமுத்து வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில் ஆலம்பட்டி அருகே சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் அவரது மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.

இதில் பிச்சைமுத்து ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர்கள் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |