Categories
உலக செய்திகள்

பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால் சம்பளத்துடன் விடுமுறை…. நியூசிலாந்து அதிரடி அறிக்கை…!!

ஆண்களுக்கு இணையாக வேலை பார்க்கும் பெண்களுக்கு கருசிதைவு ஏற்பட்டால் மூன்று நாள் வேலையும் அத்துடன் சம்பளமும் வழங்கப்படும் என்று நியூசிலாந்து அரசு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இக்காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமமாக அரசு அலுவலகங்களில் வேலை பார்த்து வருகின்றார்கள். திருமணம் செய்துகொண்ட பெண்கள் குழந்தை பெறுவதற்கான விடுமுறையும், சம்பளமும் நியூஸ்லாந்தில்  அளிக்கப்பட்டு வருகின்றது. உலக நாடுகள் அனைத்தும் இது நடைமுறையில் இருந்து வருகின்றது. பெண்கள் குழந்தைகளை பெற்று எடுப்பதற்கும் மற்றும் பல்வேறு விஷயங்களை சமாளித்து வேலைக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர்.

அதன்பின் கருவுற்ற சில வாரங்களில் எதிர்பாராதவிதமாக கருச்சிதைவு  ஏற்பட்டால், அது பெண்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தும். இந்த வேதனையுடன் வேலைக்கு செல்லும் நிலைமை ஏற்படும் அல்லது விடுமுறை எடுக்க நேரிடும். இதனைக் கருத்தில் கொண்ட நியூசிலாந்து அரசு எதிர்பாராதவிதமாக பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால் அவர்களுக்கு மூன்று நாள் விடுமுறை அளிக்கப்பட்டு சம்பளமும் கொடுக்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மசோதா கடந்த புதன்கிழமை அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைத்து முழு ஆதரவினையும் தெரிவித்து இறுதியாக சட்டம் நிறைவேற்றியது. இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது தொழிலாளர் எம்.பி. ஜினின்ஆண்டர்சன் நம் நாட்டைப் பார்த்து மற்ற நாடுகளும் பெண்களின் வேதனை அறிந்து அவர்களுக்கு கருசிதைவு ஏற்பட்டால் 3 நாள் விடுமுறையும் அத்துடன் சம்பளமும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். இச்சட்டத்தை அனைத்து நாடுகளும் உணர்ந்து அங்கீகரிக்க வேண்டும் என்றார்.

Categories

Tech |