மியான்மரில் ராணுவ படை வீரர்களின் தாக்குதலுக்கு ,ஒரே நாளில் சுமார் 114 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடங்களில் செய்தி வெளியாகியது .
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி ஜனநாயக ஆட்சியை கவிழ்த்தி ,ராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றினர். இந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக ,அந்நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போராட்டக்காரர்கள் மீது ,அந்நாட்டு ராணுவ படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் மண்டலே நகரை சேர்ந்த 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதேபோல் யங்கோன் நகரில் 21 வயதுடைய கால்பந்து வீரர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இவ்வாறு மண்டலே நகரில் மதியம் 2 .30 மணியளவில், நாடு முழுவதும் சுமார் 91 பேர் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்நாட்டு நவ் செய்தி போர்டல் தெரிவித்தது. இதற்கு முன்பு ராணுவத்தினர் ,மியான்மரில் ஆயுதப்படை தினம் கொண்டாடுவதால், இந்த தினத்திற்கு எதிராக போராட்டக்காரர்கள், போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படும், என்று எச்சரித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஆயுதப்படை தினத்தன்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் 114 பேரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.