Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை…. சோதனையில் பிடிபட்ட பணம்…. மதுரையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

மதுரையில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 76,000 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் வாக்கு சேகரிப்போர் வாக்கினை பெறுவதற்காக பொதுமக்களுக்கு பணமோ அல்லது பரிசு பொருட்களோ வழங்காமல் இருப்பதற்காக தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்துள்ளார்கள். இந்நிலையில் பறக்கும் படையினர் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மதுரை மாவட்டம் மூலகரையில் நிலை கண்காணிப்பு குழுவின் அதிகாரி மீனாட்சிசுந்தரம் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்ததில் அவர் உரிய ஆவணங்கள் இன்றி 76,000 ரூபாயை கொண்டு வந்தது கண்டறியப்பட்டது. இதனால் பறக்கும் படையினர் அப்பணத்தினை பறிமுதல் செய்து மதுரை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Categories

Tech |