Categories
மாநில செய்திகள்

“ஆணவக்கொலை” நடவடிக்கை எடுக்க தவறினால் தண்டனை… காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!!

ஆணவ கொலைக்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லையெனில் காவல்துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் சமீப காலமாக காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் ஆணவ படுகொலை செய்யப்பட்டு வருவது வழக்கமாக இருக்கிறது. ஆணவக்கொலைக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் போராட்டங்களை மேற்கொண்டும், அதற்கு எதிராக சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தும் வந்தனர்.

 

 

இந்நிலையில் இவ்வழக்கை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் , சுப்பிரமணிய பிரசாத் ஆகிய நீதிபதிகள் தாமாக முன்வந்து விசாரித்தனர். அதில் ஆணவ கொலைகளுக்கு எதிராக தனிப்பிரிவு அமைக்க வேண்டும் என்றும், ஆணவக்கொலைகளுக்கு சரியான நடவடிக்கைகள் எடுக்க தவறினால் காவல்துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் எச்சரித்ததோடு,

Image result for உயர் நீதிமன்றம்

தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் ஆணவ கொலைகள் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இந்நிலையில் சட்ட ஒழுங்கு காவலர்களே ஆணவ கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |