Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கூடுதலாக கொண்டு வரப்பட்டவை… சரிபார்ப்பு பணி மும்முரம்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

திண்டுக்கல்லில் கூடுதலாக கொண்டுவரப்பட்ட 1,060 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று சரிபார்க்கும் பணி தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், திண்டுக்கல், நத்தம் என 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் நத்தத்தில் 402, ஒட்டன்சத்திரத்தில் 352, பழனியில் 405, வேடசந்தூரில் 368, ஆத்தூரில் 407, திண்டுக்கல்லில் 397, நிலக்கோட்டையில் 342 என மொத்தம் 2,673 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கட்டுப்பாட்டு எந்திரங்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குபதிவு உறுதிசெய்யும் எந்திரங்கள் என அனைத்தும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்துவதற்காக தயாராக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 7 தொகுதிகளிலும் கடந்த 22-ஆம் தேதி போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 16-க்கு மேற்பட்ட வேட்பாளர்கள் ஒட்டன்சத்திரம், நத்தம் ஆகிய தொகுதிகளை தவிர பிற தொகுதிகளில் உள்ளனர். மேலும் 15 வேட்பாளர்களின் நோட்டா, சின்னங்கள் ஆகியவை மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் இடம் பெறும் வசதி உள்ளது.

இதனால் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஐந்து தொகுதிகளுக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே தேர்தல் ஆணையத்துக்கு கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து 1,060 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கன்னியாகுமரியில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது. இதனை தேர்தல் பொது பார்வையாளர் சோமாபட்டார்ச்சார்ஜி, தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஜயலட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர். இந்த சரிபார்ப்பு பணி நிறைவு பெற்றதும் 5 தொகுதிகளுக்கும் கூடுதலாக மொத்தம் 2,305 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |