தொகுப்பாளினி டிடியின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் பிரபல நடிகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது .
விஜய் தொலைக்காட்சியில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் (திவ்யதர்ஷினி) டிடி. இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் சில காரணங்களால் இவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர். இந்நிலையில் ஸ்ரீகாந்த் பிரபல நடிகர் சாந்தனு மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை இசையமைப்பாளர் தமன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .