ஆந்திர மாநிலத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் அமர்ந்து மாணவர்கள் முன்பு மது அருந்திய நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரில் தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் முன்பு ஆசிரியர் ஒருவர் மதுபானம் குடித்துக்கொண்டு சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருந்த காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் மது குடிப்பது மட்டுமில்லாமல் மாணவர்களையும் அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் இதனை பெற்றோர்களிடம் கூறக்கூடாது என மிரட்டியுள்ளார்.
அதில் ஒரு மாணவன் ஆசிரியர் குடித்துக்கொண்டு பிரியாணி சாப்பிடுவதை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இது குறித்து பெற்றோரிடமும் மாணவர்கள் தெரிவித்தனர் .இதை கேட்டு விசாரிப்பதற்கு பள்ளிக்கு வந்த பெற்றோர்களை ஆசிரியர் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதையடுத்து தகவலறிந்து வந்த மண்டல கல்வி அலுவலர் அந்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்தனர்.