வேலூர் தேர்தல் வெற்றியை தலைவர் கலைஞரின் காலடியில் நாம் சமர்ப்பிப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூர் தொகுதி வெற்றியை வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து வைத்து குடியாத்தம் உழவர் சந்தை பகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்களிடையே பேசிய உதயநிதி, அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். வாக்குச்சாவடிக்கு செல்லுங்கள் வாக்கு இயந்திரத்தில் முதல் சின்னம் நம்முடைய உதயசூரியன், முதல் வேட்பாளர் பெயர் கதிர் ஆனந்த்.
ஆகஸ்ட் 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அப்போ முதலிடத்தில் நமது உதயசூரியன் சின்னமும் ,நமது வேட்பாளர் கதிர் ஆனந்தம் முதலிடத்தில் இருப்பார்கள் கண்டிப்பாக செய்வீர்களா? என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின் , நம்முடைய தலைவர் கலைஞர் நம்மைவிட்டு பிரிந்தது ஆகஸ்ட் 7ஆம் தேதி. வாக்கு எண்ணிக்கை முடிவு ஆகஸ்ட் 7 எனவே வேலூர் மக்களவை தேர்தலில் நம்முடைய வெற்றியை அவருடைய காலடியில் நாம் சமர்ப்பிப்போம் என்று சபதமேற்று தேர்தல் வேலையை பார்ப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.