Categories
அரசியல் மாநில செய்திகள்

”திமுக வேட்பாளருக்கு பாடம் புகட்டடுங்கள்” G.K வாசன் வேண்டுகோள் …!!

வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஆனந்த்துக்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

வருகின்ற ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரசார பொதுக் கூட்டத்தில்  பேசிய அவர் , வேலூர் மக்களவை தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணமாக இருந்த திமுக வேட்பாளர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாக சுட்டிக்காட்டினார்.

Image result for G.K வாசன்

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தின் தவறான ஜனநாயக போக்கால் நிறுத்தப்பட்ட இந்த வேலூர் மக்களவைத் தேர்தலில் மீண்டும் நடைபெறுகின்றது. இதில் அதே கட்சியினுடைய , அதே வேட்பாளர் போட்டியிடுகிறார் என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அந்த வேட்பாளரையும் , அந்த கட்சியையும் டெபாசிட் இழக்க கூடிய நிலையிலேயே இங்கே இருக்கின்ற வாக்காளர்கள் உங்களுடைய பணியைச் செய்ய வேண்டும். திமுக வேட்பாளர் ஆனந்த்துக்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று  ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |