நம்முடைய அன்றாட உணவு ஆரோக்கியமானதாக எடுத்துக்கொண்டால் உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் என அனைத்துமே அடங்கும். ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளாவிட்டால் உடல் பிரச்சினைகள் ஏற்படும். இதற்கு இயற்கை மருந்து பொருட்களும் இருக்கின்றன. அந்தவகையில் வசம்பின் தண்டு, இலை, பூ ஆகியவை சிறந்த அருமருந்தாகும்.
வயிற்றுப்போக்கு, இருமல், நரம்புதளர்ச்சி, வாய் துர்நாற்றம் போன்றவற்றைப் போக்கும். வெந்நீர் கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம். அரை தேக்கரண்டி வசம்பு பொடியுடன் பனங்கற்கண்டு உண்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும். வசம்பு பித்தப்பை, சிறுநீர்ப்பை கற்களை அகற்றும் தன்மை கொண்டது.