Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

யாரு செஞ்ச வேலைனு தெரியலயே… அ.தி.மு.க. நிர்வாகி வீட்டில் பரபரப்பு… போலீஸ் விசாரணை..!!

சிவகங்கையில் அ.தி.மு.க. நிர்வாகிக்கு சொந்தமான இரண்டு மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டியில் மலைராஜ் ( 55 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கை ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக அ.தி.மு.க.வில் உள்ளார். சம்பவத்தன்று இவர் தன்னுடைய வீட்டிற்கு அருகே தனக்கு சொந்தமான 2 மோட்டார் சைக்கிள்களை ஓட்டு கொட்டகையில் நிறுத்தியுள்ளார். இந்த நிலையில் யாரோ சிலர் நள்ளிரவில் 2 மோட்டார் சைக்கிள்களையும் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

இதில் ஓட்டு கொட்டகையும், 2 மோட்டார் சைக்கிள்களும் வேகமாக தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிவகங்கை நகர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |