Categories
மாநில செய்திகள்

தேர்தலுக்கு பிறகு முழு ஊரடங்கு?… தமிழக சுகாதாரதுறை தீவிர ஆலோசனை…!!!

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக சுகாதாரத்துறையினர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் அதிகமாகியுள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது இந்நிலையில் நேற்று. தமிழக சுகாதாரதுறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தபோது, கட்டுப்பாடுகள் கடுமையாகப்படும் என தெரிவித்தார்.

பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், வழிபாட்டுதலங்கள் திறப்பு மற்றும் தேர்தல் பிரசாரத்தால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே பரவலை தடுக்கும் வகையில் ஏப்ரல் 2-வது வாரம் முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, தனியார் துறை ஊழியர்களை வீட்டில் இருந்து பணியமர்த்தல் ஆகியவை அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வழிபாட்டு தலங்கள், மத நிகழ்ச்சிகள், அரசியல், சமூக நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

வெளிநாட்டு பயணிகள் வருகை, மாநிலங்களுக்கிடையேயான பொதுப்போக்குவரத்தில் சில கட்டுப்பாடுகள், குறிப்பிட்ட பகுதிகளுக்கு இபாஸ் நடைமுறை, நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கை உள்ளிட்ட கட்டுபாடுகள்மீண்டும் நடைமுறைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |