Categories
தேசிய செய்திகள்

உங்க ரேஷன் அட்டைக்கு எத்தனை கிலோ அரிசி தெரியுமா?… முழு விவரம் இதோ…!!!

ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் எவ்வளவு அரிசி வழங்கப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அனைவருக்கும் சமமான பொருள் வழங்கப்படுவதில்லை. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்தே அனைத்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன்படி ரேஷன் அரிசி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையில் 1 எனில் 12 கிலோ அரிசி, 1.5 பேர் எனில் 14 கிலோ அரிசி, இரண்டு பேருக்கு 16 கிலோ அரிசி, 2.5 பேர் எனில் 18 கிலோ அரிசி, மூன்று பேர் எனில் 20 கிலோ அரிசி, நான்கு பேர் எனில் 20 கிலோ அரிசி, ஐந்து பேர் எனில் 25 கிலோ அரிசி, 6 பேர் எனில் 30 கிலோ அரிசி கிடைக்கும். நான்கு பேருக்கு மேல் ஒவ்வொரு கூடுதல் உறுப்பினருக்கும் 5 கிலோ கூடுதலாக அரிசி வழங்கப்படும். மேலும் இது பற்றிய விவரங்களை நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் www.tnpds.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும். மேலும் ஏதாவது உதவி அல்லது புகார் அளிக்க வேண்டுமென்றால் 1967/1800 425 5901 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

Categories

Tech |