தமிழகத்தில் தேர்தலுக்குப் பிறகு ஊரடங்கு அமல் படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஊரடங்கு அமல் படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அமலாகும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் என தெரிகிறது.