கீரைகளின் ராணி என்று அழைக்கப்படும் பரட்டைக் கீரையை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் சாப்பிடும் போது மிக கவனமாக சாப்பிட வேண்டும்.
அதன்படி கீரைகளின் ராணி என பரட்டைக் கீரையை சொல்வார்கள். இதில் குறைந்த கலோரி, நிறைய நார்ச்சத்து, பூஜ்ஜியம் அளவு கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. உடல் எடையை பராமரிக்க விரும்புவோர் தினம் இந்த கீரையை சாப்பிடலாம். இது எளிதில் ஜீரணமாகும். மேலும் இதில் மாட்டு இறைச்சிக்கு நிகரான இரும்புசத்து அதிகம் உள்ளது. மேலும் ஈரல், புற்றுநோய், இரும்பு குறைபாடு மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்கள் வராமல் தடுக்கும். எனவே இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.