தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போனும், வாட்ஸ் அப்பும் இல்லாத இளைஞர்களை பார்ப்பது அரிது. ஏனெனில் அலுவலக வேலை முதல் கொண்டு நண்பர்களுடன் கலந்துரையாடுவது வரை வாட்ஸ் அப்பில்தான் நடக்கிறது. அந்த வகையில் தகவல் பரிமாற்றத்தின் முக்கிய அங்கமாக மாறிவிட்ட வாட்ஸ் அப் நிறுவனம் குறிபிட்ட மொபைல் போன் பயன்படுத்தும் பயனர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை அளித்துள்ளது. iOS 9 மூலம் இயங்கும் சாதனங்களுக்கான ஆதரவை முடிவுக்கு கொண்டு வருகிறது என்பதுதான் அந்த செய்தி. அதாவது 2.21.50 வாட்ஸ்அப் பீட்டா பதிப்பின் கீழ் உள்ள iOS 9 சாதனங்களால் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது.
எனவே, உங்கள் ஸ்மார்ட்போன் இந்த பட்டியலில் இருந்தால், வாட்ஸ்அப் வேலை செய்வதை நிறுத்திவிடும். மேலும் வாட்ஸ்அப்பின் வரவிருக்கும் அப்டேட்டை ஐபோன் 4 மற்றும் ஐபோன் 4 எஸ் மாடல்களை பயன்படுத்தும் வாட்ஸ்அப் யூசர்களால் புதுப்பிக்க முடியாது, அதன்படி ஒருகட்டத்தில் ஆப் அப்டேட் செய்யச்சொல்லி கேட்கும், அந்நேரத்தில் உங்களால் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்ய முடியாது என்பதால் செயலி வேலை செய்ய மறுக்கும். இதேபோல ஐஓஎஸ்-இன் புதிய பதிப்பிற்கு இன்னும் அப்டேட் ஆகாத ஐபோன் 5, 5 எஸ் 5 சி பயனர்கள் விரைவில் அப்டேட் செய்ய வேண்டும், இல்லையெனில் அவர்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியாமல் போகலாம்.
இருப்பினும், பிற ஐபோன் பயனர்களும் தேவையானதைச் செய்ய வேண்டும். இந்த செய்தியிடல் பயன்பாட்டைத் வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த ஐபோன் 5 யூசர்கள் தங்கள் ஸ்மார்ட்போனை குறைந்தபட்சம் iOS 10க்கு புதுப்பிக்க வேண்டும். இன்றுவரை, iOS 9 இருந்தாலும் ஆப்பை பயன்படுத்த முடிந்தது. குறிப்பாக, ஐபோன்களை பொறுத்தவரை, ஐபோன் 4 மற்றும் முந்தைய மாடல்களில் வாட்ஸ்அப் இயங்காது. 4S, 5, 5S, 5C, 6 மற்றும் 6S மாடல் ஸ்மார்ட்போன் யூசர்கள், iOS 9 அல்லது அதற்கு அடுத்த ஓஎஸ்-ஐ புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து WhatsApp-ஐ பயன்படுத்த முடியும்.
ஐபோன் 6 எஸ், 6 எஸ் பிளஸ் மற்றும் முதல் தலைமுறை ஐபோன் எஸ்இ ஆகியவற்றை பொறுத்தவரை, அவை புதிதாக வெளியிடப்பட்ட iOS 14-ன் சமீபத்திய பதிப்பை ஆதரிப்பதால் எந்த பிரச்னையும் இல்லை என கூறப்படுகிறது. இருப்பினும், தற்போதைய புதிய அறிவிப்பின் படி, iOS 10 அப்டேட் செய்வது அவசியமாகிறது. அதாவது யூசர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்த ஐபோன் 5 அல்லது அதற்கு பிந்தைய மாடல் ஸ்மார்ட்போன்கள் தேவைப்படும். இந்த மாற்றம் ஐபோன் 4 எஸ் யூசர்களை பயனர்களைப் பாதிக்கும், ஆனால் இதனால் குறைந்த சதவிகித யூசர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் தெரிவித்துள்ளது.