Categories
லைப் ஸ்டைல்

தினமும் காலை வெறும் வயிற்றில்… ஒரு அத்திப்பழம் சாப்பிடுங்க… அப்புறம் சொல்லுவீங்க…!!!

தினமும் காலை வெறும் வயிற்றில் அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன.

அதன்படி அத்திப்பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் . தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் அழகும் இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும். 2 அத்திப்பழத்தை தினசரி சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாகும். அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்கும்.

Categories

Tech |