Categories
உலக செய்திகள்

ஏசி ரிமோட்டை பார்த்து அப்படியே நின்ற திருடர்… வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம்…!!!

தாய்லாந்து நாட்டில் திருடச் சென்ற இளைஞர் செய்துள்ள காரியத்தை பார்த்து காவலர் அதிர்ச்சி அடைந்தனர்.

தாய்லாந்து நாட்டில் அதித்கின் குந்துத் (22)என்பவர் வசித்துவருகிறார். அவர் அங்குள்ள வீட்டின் உரிமையாளர்கள் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து  அங்கு இருக்கும் பொருள்கள் திருடுவதை வழக்கமாக கொண்டவர். அவர் வழக்கம்போலவே சுமார் 2மணியளவில்அங்குள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.   விசியான் பூரி ஜியாம் ப்ரசெர்ட்டின் மாவட்ட காவல் அதிகாரி ஒருவரின் வீட்டில் நுழைந்து திருட முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கிருந்த பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பினார். ஆனால் அங்கு ஒரு ஏசி ரிமோட்டை பார்த்ததும் நகராமல் சிறிதுநேரம் அங்கேயே நின்று விட்டார். அதன்பிறகு அவர் என்ன நினைத்தாரோ என்றுதெரியவில்லை . அந்த வீட்டின் உரிமையாளர் காலையில் எழுந்து இருப்பதற்கு முன்னதாக நாம் எழுந்து சென்று விடலாம் என்று நினைத்து அங்கேயே உறங்கியுள்ளார்.

இந்நிலையில் காலையில் எழுந்து வந்து பார்த்த  வீட்டின் உரிமையாளரான காவல் அதிகாரி தன் மகள் வீட்டில் இல்லாத நேரத்தில் ஏசி ஓடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்  அதன் பிறகு தன் மகளின் அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு உடனே காவல் அதிகாரி மற்ற காவலர்கள் தகவல் அளித்து அங்கு வரவழைத்தார்.அந்த மர்ம நபர் சத்தம் உடனே எழுந்து சுற்றியும் பார்த்துள்ளார் அதன் பிறகு தான் காவல்துறை அதிகாரியின் வீட்டிற்கு திருட வந்தோம் என்று அவருக்கு தெரியவந்துள்ளது. மேலும் காவல் அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

 

 

Categories

Tech |