Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பாக்குறதுக்கு பயமா தான் இருக்கு இருந்தாலும் சந்தோஷம் தான் இருக்கு…. குடியிருப்புக்குள் நுழைந்த விலங்கு…. கண்டுகளித்த பொதுமக்கள்….!!

திருநெல்வேலியில் வனப்பகுதியிலிருந்து ஊருக்குள் வந்த மிளாவை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த யுகத்தில் சில மக்கள் மலைப் பகுதியிலோ அல்லது மலையடிவாரத்தில் குடியிருப்புகளை அமைத்து வசித்து வருகிறார்கள். இந்நிலையில் மலைப்பகுதியில் வசிக்கும் சில வன விலங்குகள் ஊருக்குள் வந்து மக்களின் பார்வைக்கு படும்படி சுற்றித்திரியும். அதில் சில உயிரினங்களை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் கூட சிலவற்றை பார்த்து அச்சப்படுவார்கள்.

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் காரையாறில் மின்வாரிய ஊழியர்கள் வசிக்கும் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியினுள் காரையாரிலிருந்து புகுந்த மிளா கடந்த சில நாட்களாக அங்கு சுற்றித் திரிகிறது. இதனை அப்பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்.

Categories

Tech |