தடுப்பூசி போட்டுக் கொண்ட திரை பிரபலத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகெங்கும் பரவி வந்த கொரோனா சில மாதங்களுக்கு முன்பு சற்று குறையத் தொடங்கியது. ஆனால் தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதில் திரை பிரபலங்கள் பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
ரன்பீர் கபூர், அமீர்கான், மாதவன் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மற்றுமொரு திரை பிரபலத்திற்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் யார் என்றால், சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் பரேஷ் ராவலுக்கு தான் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அப்படியிருந்தும் தடுப்பூசியை மீறி இவருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.