திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் திருமுருகன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் பவானி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென பவானி தனக்கு வாந்தி வருவதாகவும் வயிறு வலிப்பதாகவும் தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனால் திருமுருகன் கடைக்கு சென்று ஜூஸ் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பவானி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த திருமுருகன் கோயம்பேடு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமணமான இரண்டு மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.