Categories
சினிமா தமிழ் சினிமா

‘இதைவிட லைஃப்ல வேற என்ன வேணும்’… டுவின்ஸ் மகள்களின் பிறந்தநாளை கொண்டாடிய நட்சத்திர தம்பதி… வைரலாகும் கியூட் புகைப்படம்…!!!

நட்சத்திர ஜோடியான பிரஜன்-சான்ட்ரா தங்களது இரட்டையர் மகள்களின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர் .

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை சாண்ட்ரா ‘சின்னத்தம்பி’ சீரியல் நடிகர் பிரஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து நடிகர் பிரஜன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் பிரஜன்-சான்ட்ரா நட்சத்திர தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு மித்ரா, ருத்ரா என பெயர் வைத்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் தங்களது குழந்தைகளின் பிறந்தநாளை ப்ரஜன்- சாண்ட்ரா தம்பதி கோலாகலமாக கொண்டாடியுள்ளனர் . இதுகுறித்து நடிகர் பிரஜன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘இதைவிட லைஃப் ல வேறென்ன வேணும். என்  இளவரசிகள் வேகமாக வளர்ந்து வருகின்றனர் . பெண் குழந்தைகள் எப்போதுமே அப்பாவின் செல்லம். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என பதிவிட்டு தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |