Categories
அரசியல் பல்சுவை மாநில செய்திகள்

முதல்வர் விவசாயி என்றால்…. 4 மாதங்களாக போராடுபவர்கள் யார் – கனிமொழி கடும் தாக்கு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

அந்தவகையில் எம்பி கனிமொழி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “முதல்வர் பழனிசாமி விவசாயி என்றால் நான்கு மாத காலமாக டெல்லியில் போராடுபவர்கள் யார் அவர்களும் விவசாயிகள் தானே. ஊழலில்தான் தமிழகம் வெற்றி நடைபோடுகிறது” என்று விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |