Categories
உலக செய்திகள்

எகிப்தில் கிட்டத்தட்ட 98 மணிநேர போராட்டத்திற்கு பிறகு….மிகப்பெரிய சரக்கு கப்பல் மிதக்கவைக்கப்பட்டது ..!!வெளியான வீடியோ காட்சிகள் .!!

எகிப்தில் சூயஸ் கால்வாய் குறுக்கே மாட்டிக்கொண்ட மிகப்பெரிய சரக்கு கப்பல் மீண்டும் மிதக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று எவர்கிவன் நிறுவனத்தின் மிகப்பெரிய சரக்கு கப்பல் ஒன்று எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே மாட்டிக் கொண்டுள்ளது. இதனால் உலகளவில் சரக்கு போக்குவரத்த்தில் நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

அந்த கப்பலை மிதக்க வைக்க பல முயற்சிகள் மீட்புக்குழுவினரால்  மேற்கொள்ளப்பட்டதை  தொடர்ந்து திங்கட்கிழமை அன்று  கப்பலை மிதக்க வைத்துள்ளனர் .

 

இருப்பினும் சுயஸ் கால்வாய் கடல்வழி போக்குவரத்து எப்போது திறக்கப்படும் என்று குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது .

Categories

Tech |