தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக தேர்தல் அறிக்கை அமுத சுரபி, பாமக தேர்தல் அறிக்கை வளர்ச்சிக்கான ஆயுதம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் திமுக தேர்தல் அறிக்கையோ காப்பியடித்த தேர்தல் அறிக்கை. அது திவாலாகி விடும். மேலும் இந்த தேர்தலோடு திமுக அத்தியாயமே முடிந்து விடும் . திமுக என்று ஒரு கட்சியே இருக்காது என்று தெரிவித்துள்ளார.