தமிழகத்தில் மழைக்காலம் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கு மத்தியில் வெப்பத்தை தணிக்கும் விதமாக தமிழகத்தில் தென்கிழக்கு, தெற்கு அந்தமானையொட்டிய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சியானது இரண்டு நாளில் காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக உள்ளது.
இதனை தொடர்ந்து 24 மணி நேரத்தில் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்று தெரிவித்துள்ளது. எனவே மீனவர்கள் தெற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மண்டலம் அறிவித்துள்ளது.