திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நாளை நடைபெறும் பிரச்சார கூட்டத்திற்கு பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பல கட்சிகள் போட்டி போட்டு தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை பிரதமர் மோடி பரப்புரைக்காக தமிழகம் வர உள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நாளை 11:30 மணி அளவில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளார் . இதனால் அப்பகுதியில் காவல்துறையினர் மூன்றடுக்கு பாதுகாப்பினை போட்டுள்ளனர்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அந்தப் பகுதியில் சிறிய அளவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் தாராபுரம் தொகுதி வேட்பாளர் எல் முருகன் உள்ளிட்ட 13 வேட்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் பரப்புரைக்காக தமிழகம் வர உள்ளனர்