ஆஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ள இரண்டு உயர் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த லின்டா ரெனால்ட்ஸ் மற்றும் அட்டர்னி ஜெனரலாக இருந்த கிறிஸ்டியன் போர்ட்டர் ஆகிய இருவரும் பாலியல் குற்றச்சாட்டுகள் காரணத்தால் திங்கட்கிழமை முதல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அமைச்சரவையில் வேறு சில பொறுப்புகளுக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அரசாங்கத்தின் உயர் சட்ட அதிகாரியான போர்ட்டர் சக ஊழியர் ஒருவரை 1988ல் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது .
அந்தப் பெண் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார். அதேபோன்று நாடளுமன்ற அலுவலகத்தில் பெண் ஊழியர் ஒருவர் தனது உயர் அதிகாரி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை தவறாகக் கையாண்டதற்காகவும் மேலும் அப்பெண்ணை ‘லயிங் கௌ ‘என்று கூறியதற்காகவும் லிண்டா ரெனால்ட்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது . அரசு ஊழியர்களை துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைக்காக பொதுமக்கள் பெரும் கண்டனம் மற்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தொடர்ந்து அழுத்தம் அதிகரித்ததால் அவர்கள் இருவரையும் பிரதமர் ஸ்காட் மாரிசன் பதவி நீக்கம் செய்யும் முடிவை எடுத்துள்ளார்.