Categories
உலக செய்திகள்

239 பயணிகளுடன் காணாமல் போன விமானம்.. அமெரிக்கா காரணமா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

மலேசிய விமானம் காணாமல் போன விவகாரத்தில் அமெரிக்காவிற்கு தொடர்பிருப்பதாக புலனாய்வு பத்திரிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார். 

மலேசிய விமானம் MH 370, சுமார் 239 பயணிகளுடன் காணாமல் போன சம்பவத்தில் அமெரிக்காவிற்கு  தொடர்புள்ளதாக ஹொங்ஹொங்கை சேர்ந்த Florence De Changy என்ற புலனாய்வு பத்திரிகையாளர் அவரின் புத்தகத்தில் கூறியுள்ளார். இந்தப் புத்தகத்தின் தலைப்பு “The Disappearing Act: The Impossible Case of MH 3704”.

இந்த விமானம் சீனாவின் முக்கிய மின்னணு சாதனங்களை கொண்டு சென்றுள்ளது. இதனை தடுப்பதற்காகவே அமெரிக்க விமானப்படை முயற்சி செய்து வந்துள்ளது. அமெரிக்காவின் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் விமானத்தின் கண்காணிப்பில் தொழில்நுட்ப பிழை ஏற்பட்டுள்ளது.

இதனால் தான் விமானம் ரேடாரிலிருந்து காணாமல் போனதாக தெரியவந்துள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகள் இருவர் சேர்ந்து இந்த விமானத்தின் பாதையை முடக்குவதற்கு முயன்றுள்ளனர். அதன் பிறகு விமானத்தின் பாதையை மாற்ற செய்த செயல்பாடு தோல்வியடைந்தது. வேறு வழியில்லாமல் விமானத்தை சுடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

அதாவது சீனாவிற்கு மின்னணு சாதனங்கள் கிடைக்கக்கூடாது என்ற அடிப்படையில் அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சியில் இது இறுதி வாய்ப்பாக அமைந்திருக்கும். எனவே விமானம் சூட்டு வீழ்த்தப்பட்டது. அன்றிலிருந்து இச்சம்பவம் மறைக்கப்பட்டுவிட்டது என்று Florence அவரின் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |