Categories
சினிமா தமிழ் சினிமா

எடிட்டர்ஸ் வேற லெவல்… சிரிச்சிகிட்டே இருந்தேன்… குக் வித் கோமாளி பிரபலம் ட்வீட்…!!!

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி குறித்து சிவாங்கி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த அரையிறுதி போட்டியில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் ஆகியோர் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் தற்போது நடந்து முடிந்த வைல்ட் கார்டு சுற்றில் ஷகிலா, பவித்ரா ஆகியோர் பைனலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த வைல்ட் கார்டு சுற்று மிக கலகலப்பாக இருந்தது . இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வரும் சிவாங்கி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘குக் வித் கோமாளி 2 பார்த்தேன். சிரித்துக்கொண்டே இருந்தேன் . தீபா அக்கா, எடிட்டர்கள் மற்றும் டெக்னீசியன் வேற லெவல் என பதிவிட்டுள்ளார்.

 

Categories

Tech |