Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி…. இரண்டு உயிர்களை பாதுகாக்க மேற்கொண்ட ஆய்வு…. தகவலை வெளியிட்ட மருத்துவ இதழ்…!!

அமெரிக்காவில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவினை மருத்துவ பத்திரிகை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசியினை செலுத்துவதற்கு குறித்து அமெரிக்காவின் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின் முடிவினை அமெரிக்கன் ஜெர்னல் ஆப் ஒபிஸ்ட்ரிக்ஸ் அண்ட் ஜெனிகாலஜி என்ற மருத்துவ பத்திரிகையில் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில்  அமெரிக்காவின் மசாசூசெட்ஸ், பிரிகாம் மருத்துவமனை மற்றும் ரங்கன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இணைந்து 84 கர்ப்பிணிகள், 37 தாய்மார்கள் மற்றும் 16 இளம்பெண்களுக்கு பைசர் மற்றும் மாடெர்னா தடுப்பூசிகளை செலுத்தி ஆய்வினை மேற்கொண்டுள்ளது.

இந்த ஆய்வின் மூலம் தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைத்து பெண்களுக்கும் ஆன்டிபயாடிக் அளவுகள் ஒரே மாதிரியாக இருந்ததாகவும், இது நம்பமுடியாத ஆச்சரியம் என்றும் ரங்கன் பல்கலைக்கழக பேராசிரியர் கலிட் அல்டெர் கூறியுள்ளார். மேலும் கர்ப்பிணிகள் தங்கள் நஞ்சுக்கொடி மூலமும், தாய்மார்கள் தாய்ப்பால் மூலமும் குழந்தைகளுக்கு ஆன்டிபாயாடிக் அளித்துள்ளதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த குழந்தைகளுக்கு எத்தனை நாட்கள் இந்த ஆன்டிபயாடிக் இருக்கும் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படுவதாக எச்சரித்த கலிட் அல்டெர்  அதனை தடுப்பதற்காக ஒரு ஆய்வினை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி  அனைத்து நிறுவனங்களும் தயாரித்த தடுப்பூசிகளை கர்ப்பிணிகளுக்கு செலுத்தி ஆய்வு செய்ய இருப்பதாகவும், மேலும்  இரண்டு உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்பதால் இந்த ஆய்விற்கான நடவடிக்கைகளை சீக்கிரமாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் கலிட் அல்டெர் தகவல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |