ஆஸ்திரேலியாவில் சிறுமியை நாசம் செய்த நபர் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் போதே சிறையில் வைத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஆண்டனி சம்பீரி (57 வயது). இவர் கடந்த 2012ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 60 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த இவர் சிட்னியில் உள்ள பள்ளியில் ஒன்றில் படித்து வரும் சிறுமியை பாத்ரூமில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இக்குற்றத்திற்காக காவல்துறையினர் மறுபடியும் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் ஆயுள் தண்டனை பெற்று வந்த ஆண்டனி சம்பீரி கல்லீரல் புற்றுநோய் காரணமாக மார்ச் 28 அன்று சிறையிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக சிறைத்தண்டனை பெற்ற முதல் நபர் ஆண்டனி சம்பீரி தான் என்பது தெரியவந்துள்ளது.