Categories
Uncategorized உலக செய்திகள்

ஜெர்மனியில் கொரோனா தொற்று அதிகரிப்பு ..மக்களுக்கு எச்சரிக்கை செய்த ஏஞ்சலா மெர்கல்..!!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஜெர்மனில் அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயமாக விதிகளை கடைபிடிக்குமாறு எச்சரிக்கை செய்துள்ளார்.

ஐரோப்பா முழுவதும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை அதிகரித்து வரும் நிலையில் சில மாநிலங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் செயல்பட்டு வருவது அதிருப்தியை ஏற்படுத்துவதாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் கூறியுள்ளார். நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அவசரகால தடைகள் எல்லாம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதனை மாநிலங்கள் கடைப்பிடிக்காமல் இருந்தால் பெரும் பாதிப்பை ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் தடுப்பூசிகளை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் இல்லையெனில் தடுப்பூசிகளுக்கு  கட்டுப்படாத ஆபத்தான வைரஸ்களை நாம் சந்திக்க நேரிடும் என்று ஞாயிற்றுக்கிழமை அரசு எச்சரித்தது. கடந்த வாரம்1,00,000 பேரில் 104 பேர்  பாதிக்கப்படும் நிலையை தாண்டி தற்போது 130 பேர் பாதிக்கப்படுவதாக தரவுகள் வெளியாகியுள்ளது .

மேலும் ஜெர்மனியில் மொத்தம் 10.3 % மக்கள் மட்டுமே கொரோனா தொற்றின் முதல் டோஸ் தடுப்பை பெற்றதாகவும் அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒப்பிடும்போது இது பின் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |