Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்தின் 60 வது திரைப்படம் “நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப  கலைஞர்கள் ” விரைவில் அறிவிப்பு!!

 

அஜித்  நடிக்கும்  60 வது  திரைபடத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பகலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர் .

வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் நேர்கொண்ட  பார்வை   திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 8 ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும்நேர் கொண்ட பார்வை திரைப்படத்தை தவிர  AK-6௦ வது  படத்தை அஜித்துடன் பணியாற்ற ஒப்பந்தம் செய்திருந்தார்.ஆனால் அத்திரைபடத்திற்கு  இயக்குனர் யார் என்பதை அதிகரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தனர்.

இந்நிலையில்  அஜித்தின் 60 வது திரைப்படத்தையும்  வினோத் இயக்குகிறார் என்பதை போனிகபூர்  தற்போது அறிவித்துள்ளார்.மேலும் அந்த படம் ஆகஸ்ட் இறுதியில் பூஜையுடன் தொடங்கும் என்றும் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்துள்ளார். அஜித்தின் 60வது படம் குறித்த  அறிவிப்பு தற்போது வெளியான நிலையில் அப்படத்தின்  தொழில்நுட்ப  கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளன.

Categories

Tech |