Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இருக்குறது ஒன்னுதான்…. அதை வச்சி எத்தன தடவை வாங்குறது…. மோசடியில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது…!!

ஆர்.சி புத்தகத்தை வைத்து நிதி நிறுவன அதிபரிடம் 46 லட்சம் மோசடி செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் துடியலூர் பகுதியில் மகேஸ்வரி அசோசியேட் என்ற பெயரில் நிதி நிறுவனம் மற்றும் மகேஸ்வரி என்ற பெயரில் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது நிதி நிறுவனத்தில் குமரன் வீதிப் பகுதியில் வசித்து வரும் ஜெகநாதன் என்பவரும், வடவள்ளி பகுதியில் வசித்து வரும் சுரேஷ் என்பவரும் பழைய வாகனங்களில் ஆர்.சி புத்தகத்தை அடமானமாக வைத்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி உள்ளனர்.

மேலும் அவர்கள் அதே புத்தகத்தை வைத்து மற்றொரு நிதி நிறுவனத்திடம் இருந்தும் கடன் தொகையை வாங்கியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து அறிந்த கார்த்திக் தனது பணத்தை கொடுத்துவிட்டு ஆர்.சி புத்தகத்தை பெற்றுக் கொள்ளுமாறு சுரேஷ் மற்றும் ஜெகநாதனிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அதற்கு எந்தவித பதிலும் அளிக்காததால் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தவர்கள் கார்த்திக்கிடம் 46 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த குற்றத்திற்காக ஜெகன்நாதன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |