நெல்லையில் கள் விற்ற இரு வாலிபர்ளை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் வாக்கு சேகரிப்போர் பொதுமக்களிடம் வாக்கினைப் பெறுவதற்காக அவர்களுக்கு பணமோ அல்லது பரிசுப் பொருட்களோ வழங்காமலிருக்க தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தனர். இந்நிலையில் அவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதோடு ரோந்து பணியிலும் ஈடுபட்டுகின்றனர்.
அந்த வகையில் நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் சப் இன்ஸ்பெக்டர் பொன்சன் தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியிலிருக்கும் பனங்காட்டில் இரு வாலிபர்கள் மண் பானை வைத்து கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவ்விருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.