Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வாவ் செம கிளைமேட்”… படையெடுத்த சுற்றுலா பயணிகள்… களைகட்டிய கொடைக்கானல்..!!

நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு கொடைக்கானலில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து கொண்டே வருகிறது. விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் வண்ணம் வருகை தருகின்றனர். அதன்படி விடுமுறை தினமான நேற்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். இதனால் சுற்றுலா இடங்களில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் வாகனங்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி பகுதியில் அணிவகுத்து நின்றது. இதனிடையே நேற்று காலை முதல் மாலை வரை இதயத்தை வருடும் வண்ணம் இதமான வானிலை நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அங்கு தரையிறங்கிய மேகக்கூட்டங்கள் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்திழுத்தது. மேலும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி, வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்கள் என அனைத்தையும் அவர்கள் கண்டுகளித்தனர். மேலும் ஏரி சாலையில் சைக்கிள் சவாரி மற்றும் குதிரை சவாரி செய்து சுற்றுலா பயணிகள் தங்களது பொழுதை உற்சாகமாக போக்கினர். இதே போல் பூங்கா, தூண்பாறை, ரோஜா பூங்கா, பிரையண்ட் ஆகிய இடங்களை சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்ந்தனர். விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்ததால் தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிந்தது. இதனால் கொடைக்கானலில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Categories

Tech |